பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சுரதா கவிதைகள்

நம்பிக்கை இன்றிபாரில் நட்பு இல்லை . முழுதும் நனைந்து போனவர்க்கு ஈரம் இல்லை - எதற்கும் கும்பிடும் மனப்பான்மை சிறப்பு இல்லை கைக் குழந்தையைப் போல் சிறந்த ஞானி இல்லை.

- - (இசைப்பாடல்)

கற்றோரின் அறுவடை கருத்தாம்! அதுபோல் பெற்றோரின் அறுவடை அதுவே பிள்ளையாம்.

தன்னலத்தைக் காப்பதுவே பிறசெல் வங்கள்

தாய்மையினைக் காப்பதுவே குழந்தைச் செல்வம். அன்னைக்கும் தந்தைக்கும் குடும்ப வாழ்வின் அரணாகும் கருவூலச் செல்வ மாகும்.

& 象 *

குழந்தை பெறாத கோதை இல்லம் அழகிய தாயினும் அஃதோர் வீண்இல்: குழந்தை ஈன்றிட இடந்தரும் இல்லம் எதுவோ அதுவே சன்இல் ஆகும்.

-இதழ்: சுரதா"(153-1968)

கண்ணின் இயக்கமே காதலாம்! காதலர் கட்டில் இயக்கமே கருப்பமாம்! மற்றதன் தொட்டில் இயக்கமே சொந்தக் குழந்தையாம்!

  • 裘 # இலையின் இளமையே இளந்தளிர்; அந்த இளந்தளிர் போன்றதே இன்பக் குழந்தை