88
சுரதா கவிதைகள்
பன்மக்கட் பேறு பெற்றால்
பட்டியல் நீள மாகும்!
நன்மக்கட் பேறு பெற்றால்
நாட்டுக்கே பெருமை சேரும்.
–நூல்: ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’
(திருமண வாழ்த்துக் கவிதை)
குடும்பநலம் செல்வத்தால் வரலாம்; பத்துக்
குழந்தைகளைப் பெற்றுவிட்டால் வருமா? நல்ல
குடும்பநலம், ஓயாமல் குழந்தை பெற்றுக்
கொண்டிருக்கும் இல்லத்தில் இருப்ப தில்லை.
–நூல் : துறைமுகம்
உறவில் உருவாகும் ஒவ்வொரு குழந்தையும்
அடக்க முடியாத உணர்ச்சியின் அறுவடை
அதனைத் தடுக்கும் அணையே கருத்தடை
–நூல் : சுவரும் கண்ணாம்பும்
குறைந்தசட் டங்களும் நிறைந்த உரிமையும்
உள்ள நாடே நல்ல நாடாம்.
ஓரிரு குழந்தைகள் உள்ள வீடே
குடும்ப நலங்கள் குறையாத வீடாம்.
–நூல் : சுவரும் கண்ணாம்பும்
தக்கபடி இல்லத்தில் இன்பங் காணச்
சமுதாயம் சீரடைய, மக்கள் பேற்றில்