உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சுரதா கவிதைகள்


வெட்டுவது கொலையாகும்; அழகு சேர்க்க
        விரும்புவது கலையாகும், அன்பும் பண்பும்
ஒட்டுவது மிகச்சிறந்த வாழ்க்கை யாகும்.
        உறங்குவது சோர்வாகும்.........


எப்படியும் வாழ்வதுதான் வாழ்க்கை என்றே
        எண்ணுபவன் பொறுப்பற்ற மனித னாவான்.
இப்படித்தான் நாம்வாழ வேண்டு மென்றே
        எண்ணுபவன் சமூகத்தில் உயர்ந்தோன் ஆவான்.

–நூல் : துறைமுகம்

போர்வாழ்க்கை என்ப தெல்லாம்
        புறப்பொருள் வாழ்க்கை யாகும்.
சீர்வாழ்க்கை அன்பும் பண்பும்
        சேர்வதால் அமைவ தாகும்.

–இதழ் : சுரதா (1–7–68)

தைப்பனி சுடுவ தில்லை!
        தமிழ்க்கவி கசப்ப தில்லை!
மெய்பொருள் காணும் வாழ்வில்
        வேற்றுமை எழுவதில்லை!

விதையின் வளர்ச்சியை மரத்தில் பார்
        விளக்கின் வளர்ச்சியை சுடரில் பார்