உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

சுரதா கவிதைகள்



சிக்கனம்

வாசல் முதல்சமை யலின்அறை வரை
        மக்களுக்கு வேண்டும் சிக்கனம் – நம்
ஆசை அலங்காரம் அனைத்தும் குறைத்திடல்
        அவசியம் மிக்க அவசியம்.

–(23–10–65–ல் ‘போர்ப்பரணி’
வானொலி நிகழ்ச்சியில் பாடியது)



சிரமங்கள் பெரும்பாலும் குறைய வேண்டின்
        சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். யாரும்
பரபரப்பாய் மினுமினுப்பாய் வாழ்வ தாலே
        பயனில்லை! நாட்டுக்கும் நன்மை இல்லை.

–நூல் : துறைமுகம்

பேரோடும் புகழோடும் வாழ்வ தற்குப்
        பேரறிவே துணைபுரியும்; நாமெல் லோரும்
சீராக எப்போதும் வாழ்வ தற்குச்
        சிக்கனந்தான் துணைபுரியும்!....

–நூல் : துறைமுகம்

தராள மனப்பான்மை என்று சொல்லித்
        தண்ணீரைப் போற்பணத்தைச் செலவு செய்தல்