பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சுரதா கவிதைகள்

பசி

உறக்கம் வந்தால் மனம் ஒயும்.

உணவு கிடைத்தால் பசிஒயும்.

寝 *

சந்தங்கள் யாவும், பாட்டுத்

தமிழ்த்தோழி யாகும். செந்திப் பந்தங்கள் யாவும், எண்ணெய்ப்

பசிகொண்ட வெளிச்ச மாகும்

பழிவந்தால் பயப்படுவர் மேலோர்; வாட்டும்

பசிவந்தால் பயப்படுவர் தாழ்ந்த மக்கள்.

- நூல்: தேன்.மழை

கோபம்

கள்ளத்தால் சிலரழிவர்; ஏழை மக்கள்

கண்ணிரால் சிலரழிவர் பொறாமை என்னும் உள்ளத்தால் சிலரழிவர்: கோப மென்னும்

உணர்ச்சியினால் சிலரழிவர்;...... 独 就 3:

ஆற்றினது கோபத்தை வெள்ள மென்பர்

அரசனது கோபத்தை வீர மென்பர்

காற்றினது கோபத்தைப் புயலென் பார்கள் கடலினது கோபத்தை ஊழி என்பர்.