பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 97

மாற்றறியாப் பசும்பொன்னைப் போற்சி றந்த

மங்கையளின் கோபத்தை ஊட லென்பர்

ஊற்றினது கோபத்தை அருவி என்பர்

உயர்ந்தோரின் கோபத்தைச் சாப மென்பர்.

குற்றம்

மழைகுறிக்கும் மேகத்தின் நிறத்தைப் போன்று மனமிருண்டால் வஞ்சகத்தான் வளரும்.

தோண்டும் குழிகுறிக்கும் இடமெல்லாம் தண்ணீர் தங்கும். குற்றமெலாம் தியோரின் செயலில் தங்கும்.

-(13-1958-ல்சென்னைவானொலியில் - இன்னா செய்யாமை தலைப்பில் பாடிய கவிதை)

கைதி

காதலன் என்பவன் காவற் கைதி கணவன் என்பவன் ஆயுட் கைதி கவிஞன் என்பவன் கற்பனைக் கைதி புலவன் என்பவன் புத்தகக் கைதி

-நூல்: கவரும் கண்ணாம்பும்