உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

சுரதா கவிதைகள்



சென்றொரு நாட்டினை வென்று கொணர்ந்திடும்
        செல்வமும் கண்ணீரே
திட்டுவ தும்தலை வெட்டுவ தும்சிலர்
        செய்கையும் கண்ணீரே.

–நூல் : துறைமுகம்

தன்பொருள் தன்சுக மேபெரி தாமெனும்
        தத்துவம் கண்ணீரே.
தாய்மொழி மீதபி மானமும் ஞானமும்
        தாழ்ந்திடின் கண்ணீரே.

–நூல் : துறைமுகம்

மனத்துயர் எல்லாம் கண்ணீர்
மழைக்கொரு பருவ மன்றோ?


கசிந்து வருவது கண்ணீர்; அந்நீர்
உப்புக் காய்ச்ச உதவாத் தண்ணீர்.


கடல்நீரும் காவிரியும் வெள்ளங் காட்டும்.
கண்ணீரே கலங்கிடுவோர் உள்ளங் காட்டும்.


காதலிலே தோல்வியுற்றார் கண்ணீர் சொந்தக்
        காரணத்தில் வெளியீடே யாகும். நோயின்
வேதனையால் அழுபவரின் கண்ணீர் “துன்பம்
        விலகாதோ” எனக்கேள்வி கேட்கும் கண்ணீர்.