பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 101

சோதனையே வந்தாலும் நாட்டுக் காகத்

துன்பத்தை வரவேற்போன் வடிக்கும் கண்ணிர் மேதினியே பாராட்டும் கண்ணி ராகும்!

விளம்பரக்கண் ணிர்விரைவில் வற்றிப் போகும்: . . . . -நூல்: தேன்.மழை

காற்றின் முதுமை புயலாகும்

காயின் முதுமை கணியாகும் நாற்றின் முதுமை கதிராகும்

நட்பின் முதுமை அன்பாகும்

ஒய்ந்தவர் முதுமை யெல்லாம் உறக்கமாம்; கருமை பெற்ற கூந்தலின் முதுமை யெல்லாம்

கொக்குவெண் நுரையாம்; செல்வம் தேய்ந்தவர் முதுமை யெல்லாம்

தீராத வறுமை யாகும். மாந்தரின் முதுமை யெல்லாம்

மரணத்தின் இளமை யாகும்.

- நூல்:துறைமுகம்