உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

105


சந்தனத்தில் குளிர்கண்டேன்; வெப்பங் கண்டேன்.
        சருகுதனில் ஈரத்தின் வறுமை கண்டேன்.

–இதழ் : போர்வாள் (16–3–1957)

ஆலைதனில் செங்கரும்பின் துயரங் கண்டேன்
        ஆற்றோரம் கிளிப்பச்சை மரங்கள் கண்டேன்
ஓலைதனில் சுருள்கண்டேன்; ஏழை மக்கள்
        உள்ளத்தை அவ்வோலைச் சுருளில் கண்டேன்.

–இதழ் : போர்வாள் (16–3–1957)

கற்றவர்தம் இதயத்தில் நூல்நிலையம் கண்டேன்
கண்ணீரில் ஏழைகளின் ஏக்கத்தைக் கண்டேன்.


தன்னைப்பற்றி

சொந்தஅறி வோடெதையும் புதுமை யாகச்
        சொல்வதுதான் என்வழக்கம்; திருட மாட்டேன்.
செந்தமிழின் ஆண்வடிவம் என்று என்னைச்
        செறுக்கோடு நான்சொல்லிக் கொள்ளு கின்றேன்.


முதன்முதலில் தாய்ப்பாலின் இனிமை கண்டேன்;
        முதிர்நிலவே! அதனால்நான் வளர்ச்சி பெற்றேன்.
அதற்குப்பின் செந்தமிழின் இனிமை கண்டேன்;
        அதனாலே தமிழ்நாட்டில் கவிஞன் ஆனேன்.