இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
108
சுரதா கவிதைகள்
அன்புக்குத் தலைமை தாங்கும் மனிதன்
பிறர் அடித்தாலும் அணைப்பான். கண்ணீரைத்
துடைப்பான்.
–சுரதா
காதல் என்பது முதலில் மனமும், பிறகு
உடலும் செய்யும் நடவடிக்கை.
–சுரதா
நம்பிக்கைக்கு மதிப்பு தந்தால் ஆராய்ச்சிக்கு
அங்கு வேலையே இல்லை.
–சுரதா
உவமை என்பது கற்பனையில் பிறப்பதல்ல,
நடைமுறையில் ஒத்து இருக்கும்ஒன்றோ
டொன்றைத் தொடர்பு படுத்திக் காட்டுவதே;
சங்க கால இலக்கியத்தில் இருக்கும் உவமை
அழுத்தத்தின் மரபு இடைக்காலத்தில்
கைவிடப்பட்டது. அதன் காரணமாகவே
கற்பனை வளர்ந்தது.
–சுரதா
எவன் அதிக ஆச்சரியப்படுவதை
நிறுத்திக் கொள்கிறானோ அவன் சீக்கிரத்தில்
புத்திசாலியாகி விடுகிறான்.
–சுரதா