படத்திறப்புவிழா என்கிற திட்டத்தை அறிவித்து அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
☐“சுரதா தனிப் பயிற்சி கல்லூரி” என்று அவரது பெயரைத் தாங்கிய கல்லூரியை டாக்டர் எச்.ஜி. செல்வராஜ் திருச்சியில் நடத்தி வருகிறார்.
☐“உவமைக்கவிஞர் சுரதா மன்றம்” என்கிற அமைப்பு கள்ளக்குறிச்சியில் (தெ.ஆ. மாவட்டம்) புலவர் டாக்டர் இரா. வீரன் அவர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
☐இவரது கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.
☐சென்னை, மதுரை பல்கலைக் கழகங்களிலும், கேரள பல்கலைக்கழகம், மலேசியா, சிங்கை பல்கலைக் கழகத்திலும் இவரது நூல்கள் பாட நூலாக வைக்கப்பட்டிருக்கின்றன.
☐உலகமகாவி ஷேக்ஸ்பியரின் அனைத்துப் படைப்புகளும் ஒரே புத்தக வடிவமாகி வெளிவந்திருப்பதைபோல் இவரது படைப்புகள் அனைத்தும் ஒரே புத்தகவடிவமாக உருவாகி வருகிறது.
☐கம்பனின் மகன் அம்பிகாபதியைப்போல்