பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவரது ஒரேமகன் கல்லாடனும் மிகச் சிறந்த

கவிஞராகத்    திகழ்பவர்.  இவரது   மகன்
கல்லாடன் மிகச்சிறந்த கவிஞருக்கான வி.ஜி.பி.
விருது பெற்றிருக்கிறார் . சுரதாவின்   பேரன் 
இளங்கோவன் கரூர் திரு.வி.க. மன்றத்தினரால்
"தொலைக்   காட்சித்  தோன்றல் "   விருது 
பெற்றிருக்கிறார்.

"நட்சத்திர இரவு",இசை இரவு" என்பதை
போல் " சுரதா இரவு" என்று இவரது 
பாடலைக் கொண்ட இசைநிகழ்ச்சி சேலத்தில் 
நடைபெற்று பரபரப்பையும் வெற்றியையும்
ஏற்படுத்தியது. அதன் பிறகே அனைவரும்
அதனை பின்பற்றினர்.

20க்கு மேற்பட்ட கதை, கவிதை, கட்டுர
ை
நூல்களும் 100-க்கு மேற்பட்ட திரைப் 
படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ள
உவமைக்கவிஞர் நான்கு திரைப்படத்திற்க
வசனம் தீட்டியுள்ளார். 

1989ஆம் ஆண்டு இந்திய தொலைக்காட்சி

தேசிய ஒளிபரப்பில் ஒவ்வொரு மொழி யிலும் 
சிறந்த கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை 
அவர்கள் பிறந்த ஊர்களுக் கும், வாழும் 
இடத்திற்கும் சென்று படம் பிடித்து 
ஒளிபரப்பினர்ர்கள். அப்போது "தமிழ் 
மொழியின் சிறந்த கவிஞர்" என்ற தலைப்பில்
40 நிமிட கவிஞர் சுரதா அவர்களின் வாழ்க்கை