உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

சுரதா கவிதைகள்


உலகம்

வழிதடைப் பயணம் செய்பவர்க் கெல்லாம்
வாய்மொழியே நல்ல வாகன மாகும்.
பொழிநிழல் இயற்கையின் பூப்பந்த லாகும்.
புவியே பொதுமக்கள் புத்தக மாகும்.

பூமி

எழுத்தின் மீது நாம் இடுகின்ற புள்ளியே
ஒற்றாம்! கறையான் உண்டாக்கும் இல்லமே
புத்ராம்! பாம்புகள் புகுந்துபடுத் துறங்கும்
புற்றுக்கள் எல்லாம் பூமியின் செவிகளாம்!

நிலம்

மண்ணல் லாததே மணலாம். அம்மணற்
பரப்பே நெய்தல் நிலத்திற்குப் பாயாம்.