பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள் 3


                       காலம்
           கூதிர் எனுஞ்சொல் கருவைக் குறிக்கும்
           உலகில் வாழும் உயிரின மெல்லாம் 
           கருவடை தற்குக் காரண மாக 
           இப்பருவம் இருப்பதால் இதைக் கூதிர்
                                       என்கிறோம். 
          கூதிர்ப் பருவத்தில் கூதிர்க்காற் றடிக்கும் 
          மிதந்து செல்லும் மேகம் சூர்க்கொளும் 
          குளத்து மீனெலாம் குஞ்சு பொரிக்கும்
          வெப்பங் கொடுக்கும் பருவமே வேனிலாம் 
          இளவேனில் முதுவேனில் இரண்டும் . செங்கதிர்க் 
          கோபத்தில் தோன்றும் குழந்தைக ளாகும்.
          சித்திரை வைகாசி இளவேனிற் காலம் 
          குயில் கூவு தற்கிது மிகவலு கூலம் 
          எச்சில் வண்டுகள் இப்பரு வத்தில் 
          விரிந்த பூக்களில் விழித்தெழுந் திருக்கும்.
          ஆவணி புரட்டாசி கார்கால மாகும். 
          அறுபது நாட்களே அதன்வய தாகும்.
          சீர்கொண்டு விளங்கும் கார்காலத் தன்னில் 
          நீர்கொண்ட மேகம் ஊர்வலம் போகும். 
          வந்து வந்து வாடைக்காற் றடிக்கும்.