பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சுரதாகவிதைகள்

                 நீர்

உப்புநீர்க் கடலில் உருவாகும் மேகம் துப்பும் எச்சிலே தூயவெண் மழையாம்! விணையின் நரம்புபோல் விழும் மழைநீர், தாவரங் கட்கெல்லாம் தாய்ப்பா லாகும்!

ஏரியென்றும் ஆறென்றும் இருண்ட கடலென்றும் குளங்குட்டை என்றும் கூறும் இவையாவும் ஐந்து வகைப்பட்ட அழகான நீர்க்குடும்பம்!

வாலிபத்தின் அவசரந்தான் காதல் என்றான். வானத்தின் அறுவடைதான் மழைநீர் என்றாள்.

              -இதழ்: உரிமை வேட்கை
                (1974 பொங்கல் மலர்)    

கண்ணிரின் மீது செல்லும்

கப்பல்தான் கவலை ஆற்றுத்

தண்ணீரின் மீது செல்லும்

தட்டுதான் ஒட மாகும்
                -இதழ் உரிமை வேட்கை                  (1975 - பொங்கல் மலர்)

வற்றாத மேகம் வாயைத் திறந்தால் ஊசிபோல் மின்னல் உடனே தோன்றும்.