இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
9
விம்மி விம்மி மேகங்கள் அழுதால்
நல்ல மழைநீர் நமக்கெல்லாம் கிடைக்கும்
–நூல் : சுவரும் சுண்ணாம்பும்
நதி
பொன்னியே, என்று நீ பிறந்த தேதி – உதிரம்
போலவே உனக்கும் இல்லையே சாதி
உன்னுடல் தனைமறைக்கத் தண்ணீர்தான் துணியோ?
உருண்டோடும் கூழாங்கல், உன்மாலையின் மணியோ?
–(இசைப்பாடல்)
காவிரி
மரமும் பயிரினமும் பருகிடும் பாலே – குடகு
மலைமீதிருந்து மேகம் நீட்டிய காலே!
விரிந்து புகழ் அடைந்தாய் மூவேந்தரைப் போல,
விளைவும், செல்வமும், தென்னாட்டில் உன்னாலே.
–(இசைப்பாடல்)