உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சுரதா கவிதைகள்


கரையொடு பிறவாக் கருங்கடல், பூத்த
நரையொடு பிறந்த நதிபதி யாகும்!


நீல வானத்தின் நிலைக்கண் ணாடிதான்
கத்திக் கொண்டிருக்கும் கருங்கட லாகும்.


பள்ளத்தில் துள்ளு கின்ற
        பனிக்கடல் பாராய்? தீயோர்
உள்ளத்தின் இருட்டும் இந்த
        ஒலிகடல் இருட்டும் ஒன்றே!

–இதழ் : இலக்கியம்
(15–3–1961)


ஆடிக்கொண் டேயி ருக்கும்
        அழகனா தொட்டில்! கத்திப்
பாடிக்கொண் டேயி ருக்கும்
        பாடகன்! பூமிப் பெண்ணைக்
கூடிக்கொண் டேயி ருக்கும்
        கொக்கோகக் கிழவன் உப்பின்
வீடிது! மகர மீன்கள்
        விளையாடும் தண்ணீர் வீதி!

–இதழ் : இலக்கியம்
(15–3–1961)