உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

13


காடு

காடு பொருள் கொடுக்கும்
        காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக் களித்திடவே – கிளியே
        குளிர்ந்த நிழல்கொடுக்கும்
                                                                 –நூல் : தேன்மழை

ரோஜாப்பூ

பல்லொடு பிறப்பது நாகப் பாம்பு
முள்ளொடு பிறப்பது முழுரோ ஜாப்பூ!
வண்டொடு தூங்கும் மலராம் அதற்குப்
புதுப்பச் சிலைகளே புடவையாம்! மற்றதன்
அடியி லிருக்கும் முட்களே ஆணியாம்


தேன்

பொங்கி வழிந்திடும்தேன் – அது
பூக்களின் வியர்வையடி
                                                          –நூல் : தேன்மழை