உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சுரதா கவிதைகள்


வெட்டாத பள்ளத்தில் படுத்துக் கொண்டே
        விம்முகின்ற கருங்கடல்தான் ஆழ மாகும்.
கொட்டாவி விடுகின்ற புதிய பூவின்
        குழிக்குள்ளே தூங்கும்தேன் சிறந்த தாகும்.

–இதழ் : தென்னகம் (1–6–1971)

கனி

மதுரசக் கனியெலாம் மரத்தின் கொப்புளம்

–இதழ் : சுரதா (1–7–68)

மீன்

கொல்லக் கொல்லக் குறையாத சேனையோ
அக்கடல் மீதெழும் அலைகளே யாகும்!
கொள்ளக் கொள்ளக் குறையாச் செல்வமோ
விரிகடல் வளர்க்கும் மீன்களே யாகும்.

முகம்

முகத்திற்கு முகவுரை முதிரா நெற்றியே
தலைக்கு முகவுரை தாமரை முகமே

–நூல் : தேன்மழை