பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதாகவிதைகள்

15


கண்

சோதிநிலா உருண்டைக்கு விண்ணில் வீதி;
சோழர்களின் தலைவனுக்கு மண்ணில் வீதி;
நீதி முகம் வாழ்வீதி, நெடுந்தேர் வீதி;
நெருப்புவிழி வீரர்களை வளர்க்கும் வீதி.
   -இதழ்: சுரதா (1.6.1968)

பகுதியினால் சொல்விளங்கும்; கதிரோன் எட்டிப்
பார்ப்பதனால் பகல்விளங்கும்; செந்நெல் சேர்ந்த
தொகுதியினால் வயல்விளங்கும் புருவ வில்லின்
துணைகளினால் விரிவட்டம் விளங்கும்.
   - அறிஞர் அண்ணா மலர் (1968)

பயிர்ப்பலகை என்கின்ற வயலைத் தாய்போல்
பக்குவமாய்க் காப்பாற்றும் வரப்பே! வாழும்
உயிர்ப்பலகை என்கின்ற உடலில் உள்ள
உறுப்புகளில் மிகச்சிறந்த கண்ணே....
   - இதழ் : தென்னகம் (5-6-1971)

எண்களின் உதவி யாலே
எழுகின்ற கணிதம் போன்று.
கண்களின் உறவில் தோன்றிக்
கனிவதே காதல்!.........