உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சுரதா கவிதைகள்



கண்ணாலே பேசாமல் பேசு; கட்டிக்
        கற்கண்டே! பூச்செண்டே! கரும்பே! என்றான்.
பெண்பறவை விழியாலே பேச லானாள்.
        பேரழகன் கொக்கோகம் கற்றுக் கொண்டாள்.


கண்ணாடி வாசலைப்போல் இருக்கும் கண்கள்
        காதலிலே ஈடுபடும் நேரந் தன்னில்
வெண்தாழம் பூவாகும்; அன்பு காட்டும்
        வேளையிலே வெள்ளிநிலா விளக்கு ஆகும்.

–இதழ் : இலட்சியவாதி (15–5–1958)

எண்ணில் பிறப்பது கணக்கு! இருவர்
கண்ணிலும் நெஞ்சிலும் பிறப்பது காதல்.


கண்ணைப்போல் சிறந்ததொரு உறுப்பு இல்லை;
கண்ணைப்போல் சிறந்தகடல் உலகில் இல்லை;
கண்ணைப்போல் சிறந்ததொரு அழைப்பும் இல்லை;
கண்ணைப்போல் சுடும்நெருப்பு வாசல் இல்லை.

–இதழ் : இலட்சியவாதி, (15–5–1958)