உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

17


பற்கள்

நிறைந்தநாள் நிலவே! கேளாய்
        நின்அங்கம் கட்டித் தங்கம்
குறுந்தொகைப் பற்கள் முத்தின்
        குடும்பமே!...............


சொந்தங்கள் உறவில் தோன்றும்
        தொடர்கதை யாகும். யானைத்
தந்தங்கள் பெருமை தேடித்
        தருகின்ற பற்க ளாகும்.

உதடு

அணங்கின் வாயிதழ், அடிக்கடி திறக்கும்
பதினாறு அரும்புப் பற்களின் நெருக்கம்
பவளப் பெட்டியில் வைத்தமுத் துச்சரம்

–நூல் : படத்தரசி

முத்தைப்போல் இருக்கின்ற பற்கள் தம்மை
        மூடிவரும் பழக்கதவே! சிவந்த வாயே!
சத்துள்ள முத்தமிழின் நுட்பந் தன்னைத்
        தரணியிலே பறைசாற்று............

–இதழ் : முரசொலி (28–3–1955)