உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சுரதா கவிதைகள்



எப்போதும் உன்வாய் செவ்வாய்
        எனக்குநீ என்றும் திங்கள்
இப்போதுன் சிரிப்பு வெள்ளி
        இன்பந்தான் நமது பள்ளி.

–நூல் : துறைமுகம்.

மச்சம்

இறவாத புகழே சிறந்த எச்சமாம்.
தானே தோன்றும் தழும்பே மச்சமாம்.

–நூல் : சுவரும் சுண்ணாம்பும்.

இரத்தம்

முத்தும் பவளமும், உப்பும் சங்கும்
கடப்படு பொருளாம்; கனிந்த ரத்தமோ
உடல்படு பொருளாம்; உணவின் சாரமாம்!


ரத்தமும் சிவந்த ரத்தத் துளிகளும்
நரம்புக் குழாய்களில் ஓடும் நதிகளாம்.


ரத்தினம் கடையிலே! ரத்தம் உடம்பிலே
போருக்கும் ரத்தம்; புரட்சிக்கும் ரத்தம்
தந்தனர் என்பதே சரித்திரச் சத்தம்!