உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

19



கருப்பை

விவாகம் ஆகும் வரையிலது வெறும்பை
வெள்ளை வியர்வை விழுங்கினால் கருப்பை.


காதலர் கூடி உறவாடும்
        கட்டில் அறையே கழிவறையாம்
நாதமும் விந்தும் கலக்கின்ற
        நல்ல அறையே கருவறையாம்.


பெண்ணெனப் படுபவள் பேதை, பெதும்பை
அவளுடற் குள்ளே அமைந்த கருப்பை
தையற் காரன் தைக்காத சிறுபை


பெண்

அரும்பு சடங்கானால் அப்போது மலராம்
அழகி சடங்கானால் அப்போது மங்கையாம்.


மண்மீது குவிக்கும் மணல்மேடும் சரியும்.
பருவ மங்கையர் பால்மேடும் சரியும்.