இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
சுரதா கவிதைகள்
பெண்ணுரிமை
பெண்ணுரிமை பெறவேண்டும் விதவை யான
பெண்ணுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
எண்ணுரிமை எழுத்துரிமை பெற்றுப் பெண்கள்
எல்லோரும் இந்நாட்டில் கற்க வேண்டும்.
ஆடை
விண்ணுக்கு மேலாடை மேகம்; வீர
வேலுக்கு மேலாடை பகைவர் ரத்தம்;
கண்டால்நான் விடமாட்டேன் என்று கூறும்
கயவர்க்கோ காமந்தான் ஆடை யாகும்.
–இதழ் : தென்றல் (22–9–1962)
மண்ணுக்கு மேலாடை நதிகள்; காதல்
மங்கைக்கு மேலாடை கணவன்; ஈரப்
புண்ணுக்கு மேலாடை வெள்ளைப் பஞ்சு;
பூக்களுக்கு மேலாடை செந்தேன் ஈக்கள்.
–இதழ் : தென்றல் (22–9–1952)