பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாகவிதைகள் 23

பணியென்பீர் நிலாவழிக்கும் வியர்வை' என்பேன்.

பாடையென்பீர் காற்கழிந்த கட்டில் என்பேன். கனியென்பீர் விதைக்குடும்பம்’ என்பேன். நீலக்

கடலென்பீர் மன்மகளின் ஆடை என்பேன்.

- - நூல் : தேன்.மழை

உறவுக்கு மேலும் உறவு சேர்ப்பதோ தனிமைக்கு பின்னர் ஏற்படும் சங்கமம் அழகுக்கு மேலும் அழகு தருவதோ குமரியின் நெற்றியில் குடியேறும் குங்குமம்.

கூந்தல்

நீலநிறம் அநைந்தாடிக் கொண்டி ருக்க

நிச்சயித்த பள்ளந்தான் கடலென் றிட்டாள் ஆலமரம் தருகின்ற விழுதே உன்றன்

அழகான கருங்கூந்தல் என்று சொன்னான்.

-இதழ் : உரிமைவேட்கை - (1974 - பொங்கல் மலர்)