இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
25
கணிகை
உதட்டு விற்பனைக் காரி; பணத்தை
உருட்டினால் உடலை ஓட்டும்சிங் காரி!
✽✽✽
கல்வியும் ஆழம்! கடலும் ஆழம்!
கணிகையர் உள்ளமோ கடலினும் ஆழம்!
விளக்கு
விளக்கிற்கு இருட்டை ஒழிப்பதே வேலை.
அதனடி நிழலே அதுகட்டும் சேலை.
✽✽✽
ஏரிதான் வயலின் தாய்ப்பால்;
எரிகின்ற விளக்கே! எண்ணெய்ச்
சூரியன் நீதான்! தீயின்
தொடர்கதைச் சுருக்கம் தீதான்!
✽✽✽
வாலினால் நீர்குடித்து
வாயினால் பிள்ளை பெத்து
இருட்டை விரட்டுதடி
எங்க ஊட்டுத் திரிவிளக்கு!