இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
29
முக்கோணத் தமிழ்நாடு முல்லைக் காடு;
மூத்தநிலம்; இந்நாடு நெல்லின் வீடு.
–இதழ் : தமிழ்நாடு (14–1–1962)
–(பொங்கல் மலர்)
மாந்தரெலாம் உணவினிலே இன்பம் காண்பர்
மாகவிஞன் இன்பத்தில் உணவு காண்பான்
தீந்தமிழ்போல் பிறமொழிகள் இனிப்ப தில்லை.
திருத்தங்கள் இல்லாத நாடே இல்லை.
–இதழ் : ‘தமிழ்நாடு’ (14–1–1965)
வாய்க்காலின் தண்ணீரைத் தொட்டுத் தூங்கும்
வயல்தனிலே ஏருழுவின் செய்தி யுண்டு.
தாய்பாலில் குடும்பத்தின் கதையும், நாட்டின்
சரித்திரமும் சந்தித்துக் கொண்டி ருக்கும்.
–நூல் : தேன்மழை
வரம்பு
அலைவரம்பு மீறிவிடின்
நெய்தல்நிலப் பகுதியெலாம் அழிந்து போகும்.
கலைவரம்பு மீறிவிடின்
சமுதாயச் சிந்தனைகள் கருகிப் போகும்.