உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சுரதா கவிதைகள்



நம்பிக்கைமோசம்

காட்டின் சிறுநெருப்பு
        காந்தள் மலர்ச்சிரிப்பாம்
நாட்டின் பெருநெருப்பு –கிளியே
        நம்பிக்கை மோசமடீ

—நூல் : தேன்மழை


வஞ்சகம்

வழிமறித்தும் கொள்ளியிட்டும் களவு செய்தும்
வஞ்சித்தும் பிறர்பொருளைப் பெறலா மேனும்
பழிகுறிக்கும் செயல்செய்து சேர்க்கும் செல்வம்
பழிவாங்கும்; அதுவரையில் அதுவா தூங்கும்?

–(13–4–1968–ல் சென்னை வானொலியில்
‘இன்னா செய்யாமை’ என்ற தலைப்பில்
பாடிய கவிதை)



மெல்லிய பூவினில் தேன்துளி தூங்கும்.
        வெய்யிலில் அல்லிப்பூ தூங்கும்.
வில்லின் நடுவில் அம்புகள் தூங்கும்.
        வேடத்தில் வஞ்சகம் தூங்கும்.