உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

31


நெருக்கடிகள் வரும்போதும், கொடிய துன்ப
        நிகழ்ச்சிகளால் தாக்குற்றுக் கலங்கும் போதும்
சிரிப்பதற்கு முயன்றாலும் முடிவ தில்லை.
        சிலர்சிரிப்பில் வஞ்சகமே நுழைவ தில்லை.

–நூல் : துறைமுகம்

மயில்தூங்க வேங்கைமரம் இடங்கொ டுக்கும்;
        மதயானை தன்காலால் தினையி டிக்கும்;
வயல்நீரை வரப்பெல்லாம் அளக்கும்; நாட்டின்
        வளத்தையெலாம் குறிஞ்சிநிலம் விளக்கும்.

–இதழ் ‘சுரதா’ (1–12–1969)

பகை

நெருப்பின் அழுக்கே புகையாகும்
நினைவின் அழுக்கே பகையாகும்.

சாட்சி

கண்ணும் பொருளும் கலப்பதே காட்சி!
காட்சிதான் உலகில் பொய்சொல்லச் சாட்சி!