உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சுரதா கவிதைகள்


நீதி

நெய்படும் சோற்றில், நஞ்சின்
        நிழல்படு மாயின், சாவின்
கைபடும்! அதுபோல் நீதி
        கறைபடின், உண்மை சாகும்!

–இதழ் : ‘சுரதா’ (15–3–68)

தூங்காத புலமை பெற்றோர்
        சொல்லிடும் நீதி, என்றும்
ஏங்காம லிருக்கும்! வாழ்வில்
        இளைத்துப்போ காதி ருக்கும்.

உரிமை

அந்தந்த நாட்டினைச் சொந்தக் குடிமக்கள்
        ஆளுவ தன்றோ அரசுரிமை –இங்கு
வந்து இறங்கிய அந்நியர்க் கிந்திய
        மண்ணில் உரிமைகள் என்ன உண்டு?