பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சுரதாகவிதைகள்

சாதியும் மதமும் சாத்தி ரங்களும் ஏழைபணக் காரன் என்கின்ற பேதமும் பழைய உலகின் பகைப்பட் டாளம்:

響 * * * காதலிலே கட்டுண்டால்; பொன்னில் செம்பு

கலந்தாற்போல் கலப்புமணம் பெருகி வந்தால் சாதியெலாம் சூடுண்ட இரும்பில் பட்ட

தண்ணிரின் துளிபோல மறைந்து போகும்.

சோசலிசம்

கேப்டலிசம் சமரசம்

சூரியன் ஒளியும் மழையும் காற்றும் தெய்வம் தந்த சோசலிசம் -நாட்டைச் சுரண்டும் கூட்டத்தான் கேப்டலிசம்-ஏழை துடித்தெழுந்தால் வரும் சமரசம்

- ('சத்தியம் தவறாதே'படப்பாடல்

பண்பாடு

பண்படுதல் பண்பாடாம். மிகச் சிறந்த

பண்பாடு வளர்ந்தோங்க வேண்டு மாயின்

புண்படுத்தும் செயல்புரியா திருத்தல் வேண்டும்.

புகழ்வளர்க்கும் சிறந்தசெயல் புரிதல் வேண்டும்