இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
39
திருவிழாக்கள்
அங்கங்கே இருப்பவரை ஒன்று சேர்க்கும்
ஆயுதந்தான் தித்திக்கும் திருவி ழாக்கள்!
பொங்கல்
தக்கவர் எழுத்தும் பேச்சும்
தாய்மொழிப் பொங்க லாகும்
மக்களின் உழைப்பில் தோன்றும்
மனைவிழா உணவுப் பொங்கல்.
–இதழ் : சுதேசமித்திரன்
–நூல் : தேன்மழை
ஒற்றுமை
உண்மையும் அன்பும்
ஒற்றுமை யானால்
செந்தணல் கூடச்
சந்தனமாகும்.
–‘மூடுபனி’ நாடகப்பாடல்