இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நீதியே முடிவில் வெல்லும்
நிச்சயமாய் நம்பு –நாட்டுக்
கொற்றுமையே தெம்பு –கெட்ட
நினைவு கொண்டு தாக்கும் பகைவர்
நெருப்பில் வீழும் கொம்பு!
✽✽✽
மறுத்துக்கொண் டிருப்பதுவே திறமை யன்று!
மனங்கலந்தால் குற்றங்கள் குறையும். நாடு
சிறப்புற்றுச் செழித்தோங்க வேண்டு மாயின்
தேசீய ஒருமைப்பாட் டுணர்ச்சி வேண்டும்.
✽✽✽
காய்ந்தமனம் கொண்டோரே சமுதா யத்தில்
கண்டபடி வேற்றுமையை விளைவிக் கின்றார்.
சாந்தகுணம், பெருந்தன்மை குறையும் நாட்டில்
சமுதாய ஒற்றுமையும் குறைந்து போகும்.
கூட்டுறவு
கோடை மாறினால் குளிர்ச்சி தரும்
கூட்டுறவு விருந்தால் வளர்ச்சி வரும்.