உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சுரதா கவிதைகள்



படத்துறை இறங்கி ஏறும்
        படித்துறை போன்ற தாகும்.


கதை

கதையெலாம் வார்த்தை வெடிப்புகள், கட்டுக்
கதைகளோ கற்பனை கலந்த தடிப்புகள்


நாட்டில் நடை பெறும்நிகழ்ச்சி ஒவ்வொன்றும்
        சிறுகதையாம்; நல்லோர் செய்த
பாட்டுநடை தேனமுதாம்! உரைநடையே
        பொதுமக்கள் பசிக்குச் சோறாம்.

–நூல் : துறைமுகம்
–இதழ் : சுரதா (1–3–68)



காரணம் இன்றிக் கதைகளும், கதைகளின்
தோரணம் இன்றித் தொடர்ச்சியும் இல்லை.
கதையெல்லாம் வார்த்தை வெடிப்புகள், கட்டுக்
கதையெல்லாம் கற்பனை கலந்த தடிப்புகள்!

–இதழ் : ‘சுரதா’ (1–12–1970)


உரைநடை

நாட்டில்நடை பெறும்நிகழ்ச்சி
        ஒவ்வொன்றும் சிறுகதையாம்; நல்லோர் செய்த