பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 45

பாட்டுநடை தேனமுதாம்

உரைநடையே பொதுமக்கள் பசிக்குச் சோறாம்:

எழுத்தாளன்

நல்ல எழுத்தாளன் வெல்லம் போன்றவன் அன்னவன் எழுத்து ஆணிவேர் போன்றது.

–ੁ–

நூல்கள் |

காவியத்தால் நாட்டுக்கு நன்மை செய்யக்

கருதிடுவோர், ஈசலைப்போல், அற்ப நாளில் ஆவியற்றுப் போகின்ற நூற்கள் நூறு

அளிப்பதனாற் பயனில்லை! பெருமை இல்லை

பூவுலகோர் சிந்தித்து மதிக்கத் தக்க புதுஎண்ணம் வாடாத திறமை சேர்த்துச் சாவதற்குள் குறையில்லாப் பெருநூல் ஒன்று தந்திட்டால் புகழ்நிலைக்க அதுவே போதும்.

ஆதி இலக்கிய நூல்கள் - அவை

ஆழ்கடல் நீந்தும் கலன்கள்: நீதி இலக்கிய நூல்கள் அவை

நேர்வழி காட்டிடும் கைகள்.

- நூல் : துறைமுகம்