பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சுரதா கவிதைகள்

நாட்டியம்

நாட்டியம். பேசாப் பேச்சாம்! நமதுதாய்த் தமிழின் மூச்சாம்: நாட்டியக் கலையே. கண்ணை நாக்காக மாற்றும் வித்தை!

- இதழ்: சுரதா (1-12-1969)

3ᏕᏍöyü

இலையார்வம் ஆடு கட்கும்

எழுத்தார்வம் கவிஞர் கட்கும் விலையார்வம் வணிகர் கட்கும்

வினையார்வம் சிலர்க்கும், செந்தி உலையார்வம் கொல்லர் கட்கும்

உண்டாதல் இயற்கை வாழ்வில் கலையார்வம் எல்லோ ருக்கும்

கணிவது கடின மாகும்.

- இதழ் சுரதா (15-8-1969)

அலைவரம்பு மீறிவிடின் நெய்தல்நிலப் பகுதியெலாம் அழிந்து போகும் கலைவரம்பு மீறிவிடின் சமுதாயச்

சிந்தனைகள் கருகிப் போகும்.

-இதழ் சுரதா (1.3-68)