பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சுரதா கவிதைகள்

அற்புதக் கலைகள் நாட்டுக்
கவசியம்: கலையு ணர்ச்சி
பெற்றவர் உளத்தைத் துன்பம்
பெரும்பாலும் சுடுவ தில்லை.

மலைநிலம் தன்னில் மேயும்
மான்களின் ஓட்டம் பொங்கும்
அலைகடல் ஆட்ட மெல்லாம்
அற்புதக் கலைக ளாகும்.

இயற்கையின் துணையைக் கொண்டும்
எண்ணத்தின் உதவி கொண்டும்
செயப்படும் பொருள்கள் யாவும்
சிறப்புறு கலைக ளாகும்.

பாடல்

திருத்தாமல் திருந்தாமல் மாற்ற மில்லை;
திருத்துங்கள் தீட்டுங்கள், விளாங்காப் பாடல்
செரிக்காத சோறாகும். மனித னுக்கே
தேவையற்ற சாதிமதம் போன்ற தாகும்.

-இதழ் தமிழ்நாடு (14-1-1965)


விதைமுயற்சி மரமாதிப் பூத்துக் காய்த்து
விளங்குதல்போல் விளங்குவதே சிறந்த செய்யுள்