உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

49


மதிமுயற்சி உடையோரே இலக்கி யத்தில்
மறுமலர்ச்சி உண்டாக்கிக் காட்டக் கூடும்.

–இதழ்: ‘சுரதா’ (15–5–1968)

உயத்தைப் படுக்கவைத்தால் நீட்ட மாகும்
        உள்ளத்தைப் பழுக்கவைத்தால் புதுமை
                                                                            தோன்றும்
துயரத்தின் உச்சியிலே கண்ணீர் தங்கும்
        சொற்களுக்கு வாழ்வளித்தால் கவிதை பொங்கும்.


ஒத்தமனம் கொண்டுவிட்டால் காதல் அங்கே
ஊற்றெடுக்கும்; நினைவெல்லாம் இனிக்கும். கல்விச்
சத்துடையோர் தொடுக்கின்ற பாடல் நன்கு
சாதிக்கும்! தலைமைக்கும் தலைமை தாங்கும்.

–இதழ்: ‘சுரதா’ (15–4–1968)

காவியத்தால் புலனின்பம் பெருகும்; கல்வி
        கனவுவரும்; விழிவீடு வெளிச்ச மாகும்!
பாவியெத்தோன் என்றாலும், அவனைப் பற்றிப்
        பாடிவிட்டால் இலக்கியத்தில் நிலைத்து நிற்பான்!

–இதழ்: ‘சுரதா’ (1–5–1968)
–(‘தமிழே என் உயிர்!’ என்னும் நூலுக்கு
வழங்கிய அணிந்துரை)