உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

சுரதா கவிதைகள்



அப்பத்தைச் சுடும்போது பொத்தல் வந்தே
        அதன்நடுவில் தானாக அமைதல் போலே
ஒப்பற்ற காவியத்தில் எங்கி ருந்தோ
        ஓடிவந்து கருத்துக்கள் குதிப்ப தில்லை.


அடையாளம் காட்டுகின்ற யாப்பின் மூலம்
அமைகின்ற வடிவந்தான் செய்யு ளாகும்.


பயிற்சிமிக்க கவிஞர்களின் சிறந்த பாடல்
பசிதீர்க்கும் மேன்மேலும் அறிவுண் டாக்கும்.


ஒற்றை நிலாவெளிச்சம் –பல
        ஊருக்கும் நாட்டுக்கும் ஓசை உலகுக்கும்
முற்றும் பயன்படல்போல் –மொழி
        மூதறிவாளரின் பாடல் பயன்படும்.


நாட்டுக்கு மருத்துவம் நல்ல கொள்கையாம்
பாட்டுக்கு மருத்துவம் யாப்புநூற் பயிற்சியாம்


பக்குவத்தைப் பழுத்தபழம் காட்டும்; நல்ல
பாடல்களை அப்பாடல் கருத்து காட்டும்.

–இதழ் : சுரதா (15–4–68)