உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

53



உழைப்பு

உண்மை உணர்ந்தவர்க்கு வேற்றுமை இல்லை.
உயர்ந்தவர் தாழ்ந்தவர் பிறவியில் இல்லை.
விதைக்காத வயல்தனில் அறுவடை இல்லை.
உழைக்காதவன் வாழ்வில் முன்னேற்றம் இல்லை.

–(இசைப்பாடல்)

கடலே முகிலுக் கலுவலகம்
       கண்ணே கனவுக் கலுவலகம்
உடலே உயிருக் கலுவலகம்
       உழைப்பே வாழ்வுக் கலுவலகம்


உழைப்பே இன்றி உலகில் வாழ்பவன்
கரும்பில் தோன்றும் வெறும்பூப் போன்றவன்.


கற்பனை பெருக வேண்டின்
       கல்வியைப் பெருக்க வேண்டும்.
வெற்றியைப் பெருக்க வேண்டின்
       மேன்மேலும் முயல வேண்டும்.

–நூல் : தேன்மழை

விதவைக்கு மீண்டும் விவாகம் செய்யலாமா தோழா–உயிர்
விதையை முளைக்க விடுவதே நல்லது தோழி.