இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
55
ஊக்கம்
ஊக்கத்தை நெஞ்சில் வைத்தும்,
உழைப்பினை வாழ்வில் வைத்தும்,
தூக்கத்தை விரட்டு வோர்க்குத்
தோல்வியே வருவ தில்லை!
தகுதி
தகுதி மிக்கோர் தருகின்ற பட்டம்
பகுதி போன்று நிலைத்து நிற்கும்
–நூல் : தேன்மழை
குலைக்கனம் கொண்ட தென்னங்
குறும்பையைப் போன்றோர்க் கெல்லாம்
தலைக்கனம் வருமே யன்றித்
தகுதிகள் வருவ தில்லை!
–இதழ் : சுரதா (15–4–1968)
மதிநுட்பம்
கற்றோரை யார்வெல்லப் கூடு மென்றால்
கவிஞன்தான்! அரசாளும் முறையில் இங்கே