இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
57
ஒருசிலர் ஒன்றே செய்வர்
செய்யினும் ஒழுங்காய்ச் செய்வர்
–நூல் : தேன்மழை
உண்மைகள் நன்மைக்கு வழிகாட்டும்
உயர்ந்தோர் என்பதைச் செயல்காட்டும்.
புகழ்
பொன்னும் பெண்ணும் அழகின் அவதாரம்
புகழ்தான் சிறந்த அறிவின் அலங்காரம்.
செல்வாக்கு நாலைந்து சிற்றூரைத் தாண்டும்
நல்ல புகழே நாட்டினைத் தாண்டும்
✽✽✽
திறந்து கிடக்கும் திசைகளின் வாயிலைக்
கீறிச் செல்வது கீர்த்தியாம் சாவையும்
மீறி வாழ்வது மேலான புகழாம்.
✽✽✽
நெருங்கியவர வேண்டுமெனில் நல்லுறவு வேண்டும்.
நீண்டுவர வேண்டுமெனில் ஓங்குபுகழ் வேண்டும்.
✽✽✽
மிகுதியெலாம் நீரானால்; கடலாய்த் தோன்றும்;
மிச்சமெல்லாம் அறிவானால், புகழாய்த் தோன்றும்.