பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தார்கள். முருகு சுப்பிரமணியன், பெரி

யண்ணன், இராம சுப்பையா, கிருஷ்ணராஜு 
ஆகியோர் கூடி அமைந்த இந்த நாடகக்
குழுவின் பெயர் முத்தமிழ் நிலையம்"
என்பதாகும். இந்த நாடகக் குழுவினரால்
பாரதிதாசனின் "புரட்சிக்கவி’ நாடகம் தமிழ்
நாட்டில் பல இடங்களிலும் நடத்தப்பட்டது.
அதில் அமைச்சர் வேடத்தில் உவமைக்கவிஞர் 
நடித்தார்.

"தந்தை பெரியார், கலைவாணர் என். எஸ்.
கிருஷ்ணன், இரத்தின சாமிப்பிள்ளை ஆகி 
யோரின் தலைமையில் நடைபெற்ற "புரட்சிக்
கவி' கவிதை நாடகம் அக்காலத்தில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நாடகத்தில் 
அமச்சர் வேடத்தில் உவமைக் கவிஞர் நடித்து,
பெரும் பாராட்டுதலைப் பெற்றார்.

அக்காலத்தில் அரசவைக் கவிஞராக இருந்த
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 
அவர்களுடன் பல மாதங்கள் தங்கியிருந்து
அவரது எழுத்துப் பணிகளுக்கு உதவியாள
ராக இருந்தவர் நமது உவமைக் கவிஞர்.

அறிஞர் வ.ரா. அவர்களை முதன் முதலில் சந்தித்தபோது நீங்கள் எழுதிய கவிதை

ஒன்றைப் பாடுங்கள் என்று சொல்ல,
உவமைக்கவிஞரின் பாடலைக் கேட்ட்வுடன்
வ.ரா. மற்றொரு பாரதி பிறந்து விட்டான்"