உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

65


ஓரிரண்டு வினாடிகளே நிலைத்தி ருக்கும்!
உடல்கூட அப்படித்தான்.....


மண்என்றால், அணுஎன்றே அர்த்தும். சட்டி
        மண்ணைப்போல் நம்உடலும் அணுவின் சேர்க்கை
எண்ணங்கள் கண்ணுக்குத் தெரிவ தில்லை
        என்றாலும் அவைகூட அணுக்கள். இங்கு,
தொண்ணூரு நூற்றாண்டு வாழ்ந்திட்டாலும்,
        சுட்டெரித்தால் தீர்ப்பென்ன? சாம்பல் தானே!


நேற்றிருந்தான் இன்றிருப்பார் என்ப தென்ன
        நிச்சயமா? ஒன்றுமில்லை! தமிழ்ச்சங் கத்தில்
வீற்றிருந்த கீரனெங்கே? சேர சோழ
        வேந்தரெங்கே? அலெக்காண்டர் இப்போது தெங்கே?

‘கூற்றுவனே வந்தாலும் அஞ்சேன்’ என்று
        கூறியநம் அப்பரெங்கே? எல்லாம் மூச்சுக்
காற்றிருக்கும் வரையில் தான்! நம்மெல் லோர்க்கும்
        கால்கழிந்த கட்டிலன்றோ கடைசிக் கட்டில்?