பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சுரதா.கவிதைகள்

கணக்கின்றிக் கால மில்லை:

கருவின்றி உயிர்கள் @ుతాణ.

கணக்கொடு பத்து மாதம் கருவறை தனிலி ருந்து

கணக்கொடு பிறந்து, கொஞ்ச

காலமிவ் வுலகில் வாழ்ந்து

கணக்கினை முடித்துக் கொண்டு

கண்மூடு கின்றோம். யாவும்.

கணக்கில்தான் அடக்கம், இங்கே கணக்கின்றி எதுநடக்கும்?

அழகு

சொல்லுக்குச் செந்தேன் தந்தாள்.

சுனைநீர்க்குக் குளிர்ச்சி தந்தாள். அல்லிக்குச் செவ்வாய் தந்தாள்.

அழகுக்கே அழகு தந்திாள்.

袭 哀

இயற்கையின் காட்சி தன்னை

எழிலென்று சொல்லுவேர்ர்கள்

செயற்கையின் வடிவம் தன்னை அழகென்று செப்பு வார்கள்