இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
71
காவிரி ஆழமென்றேன்–அவர்
காதலே ஆழமென்றார்!
சேவலேன் கூவுதென்றேன்–விழிச்
சேனையேன் தாக்குதென்றார்!
–இதழ் : ‘சுரதா’ (1–5–1968)
கத்தியின் யுத்தமும், தித்திப்பு முத்தமும்
வீரத்தை, சுவையை வளர்க்கும் கலைகள்.
ஐந்து பொருளால் ஆனஇவ்வுலகில்
இன்பக் கலைகள் எத்தனை இருப்பினும்
காதலை வளர்க்கும் கலையே சிறந்தது!
காதலோ, குடும்பக் கலையின் விளக்கம்!
–‘குடும்பக்கலை’ ஆண்டுமலர்
பல்லவியைச் சரணம் போய்த் தழுவல் போன்று
பாவையவள் தோள்தழுவி மகிழ லானான்.
–இதழ் : உரிமை வேட்கை
–(1974–பொங்கல் மலர்)
ஆதிநூல் குறிக்கும் அன்பின்
ஐந்திணை என்னும் இன்பக்
காதலே, நெஞ்சும் நெஞ்சும்
கலந்திடும் வாழ்க்கை யாகும்.
✽✽✽