உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

77



நாணமே பெண்மைக்கு நல்ல மதிப்புரை
திருமண வாழ்க்கையே சிறந்த பதிப்புரை

–நூல் : சுவரும் சுண்ணாம்பும்.

ஒருவருக் கொருவர்துணை யாவ தற்கும்
        ஒட்டியுற வாடிசுகம் காண்ப தற்கும்,
திருமணமே நல்லதொரு நிகழ்ச்சி யாகும்.
        திருமணத்தால் சமுதாயம் சுத்த மாகும்.


மணமென்றால் புகழாம்! அந்த
        வான்புகழ் சிலர்க்கே வாய்க்கும்!
மணமென்றால் வாசம்; அந்த
        வாசமே மலரின் மூச்சாம்!
மணம்செய்து கொள்வ தில்லை
        மலரினம் நம்மைப் போல!
மணமின்றித் தனித்து வாழும்
        வாழ்க்கையும் சிறப்ப தில்லை!

–(6–7–70–ல் ஒரு திருமண வாழ்த்தில்)


கலப்புமணம்

நிலத்தில்நாம் உண்டாக்கும் கலப்பை, மக்கள்
        நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோ மானால்.
கலப்புமணம் உருவாக வழியுண்டாகும்.
        கலப்புமணத் தால்சாதி செத்துப்போகும்