பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சுரதா கவிதைகள்

ஒட்டாமல் உறவில்லை, கலப்பு இன்றி

உலகத்தில் தனிப்பொருளால் எதுவு மில்லை: வெட்டாமல் குளம்வருமா? அரும்பின் கூட்டம்

விரியாமல் இருந்துவிடில் மணந்தான் ஏது.

-இதழ்: இலட்சியவாதி(1-7-1958)

காதலிலே ஈடுபட்டால், நாட்டு மக்கள்

கலப்புமணம் செய்துகொள்ள ஒப்புக்

கொண்டால் சாதிகளே வேரற்று வீழ்ந்து போகும்

சாத்திரமும் கோத்திரமும் கண்ணை மூடும்

கலப்பு மணம் நெய்தல்நிலம் போன்ற தாகும்;

மலர்ச்சிதரும் சீர்திருத்த மணமோ, செந்நெல்

வயல்சார்ந்த மருதநிலம் போன்ற தாகும்.

தாலி

நான்ரி தனித்தனி, நங்கையே இன்று தான் நீ எனக்கு நீ, தையல் உனக்குதான்; நான்தான் நீ-இனி நான்தான் நீ.யெனும் தத்துவ விளக்கமே தங்கத் தாலியாம்.

- துரல்: சுவரும் சுண்ணாம்பும்