பக்கம்:சுலபா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 <3sF

அவள் அடைந்திருக்கிருள். மேலே போகிற வேகம் மகிழ்ச் சியை அளித்திருக்கிறது.

தன் அழகைப் புகழ்ந்து இப்படி எழுதியிருக்கிற அமெச்சூர் இரசிகர்களுக்குக் கையெழுத்துடன் தன் புகைப் படம் கூட அனுப்பியிருக்கிருள். அது ஒரு காலம். இப்போது அப்படிப் படங்கள் அனுப்புவதற்கு அவசியமே இல்லை. எந்தப் பத்திரிகையைப் புரட்டிலுைம் அவள் படங்கள் இருந்தன. அவள் படம் பிரசுரமாகாத இதழ் அபூர்வம்தான்.

தற்காலத் தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டுமில்லை. மலையாள, தெலுங்கு கன்னடப் பத்திரிகைகளிலும் இந்திப் பத்திரிகைகளிலும் கூட அவள் படங்கள் வெளி வந்தன.

தெலுங்கு அவள் தாய்மொழி. தமிழ்நாடு அவள் பிழைக்க வந்து முன்னேறிய இடம். மலையாளததிலும், கன்னடத் திலும் பேசி நடிக்கக் கற்றுக் கொண்டாள். இந்தியில் அவள் வாயசைததாள். அவளுக்காக வேறு யாரோ பேசினர்கள். அவளோடு ஹீரோவாக நடித்திருந்த சில நடிகர்கள் மார்ககெட் இழந்து உட்கார்ந்து விட்டார்கள். அவளோ நித்ய கன்னியாக நிலைத்து நிருைள், அவளுடைய ரேட்" உயர்ந்து கொண்டே போயிற்று. தன்ளுேடு ஹீரோவாக நடித்தவர்களின் மகன்களோடும், சிலரைப பொறுத்தவரை பேரண்களோடும் கூட அவள் கதாநாயகியாக நடித்திருந் தாள். ஒடியாடிக் காதல் செய்திருந்தாள்.

படங்களில் எத்தனையோ பல நடிகர்களோடு அவன் கதா நாயகியாக நடித்துக் கொண்டிருந்த சமயங்களில் அவளைப் பற்றியும் அந்தக கதா நாயக நடிகர்களைப் பற்றியும் இணைத் துக் கிசுகிசுககள் வெளிவந்துள்ளன. ஆனல் கிசுகிசுக்களாகவே பிசு பிசுத்துப் போயினவே ஒழியச் செய்தியாகவோ, உண்மை யாகவோ ஆனதே இல்லை. -

"அவர் இவளைக் காதலிக்கிருர்-விரைவில் திருமணத்தில் முடியலாம். இவள் அவரைக் காதலிப்பதாக நம்பத் தகுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/10&oldid=565678" இலிருந்து மீள்விக்கப்பட்டது